சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்: தீட்சிதர்களுக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து டி.எஸ்.சிவராம தீட்சிதர் உள்ளிட்டோர் சார்பி்ல் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் தலையிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. கோயில் நிர்வாகத்தை தீட்சி்தர்கள் வசம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது, என்றார்.

பதிலுக்கு அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆறுகால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது, என்றார்.

அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் அரசுக்கும், பொது தீட்சிதர்கள் தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். கடவுள் முன்பாக யார் பெரியவர் என்ற போட்டி ஒருபோதும் இருக்கக்கூடாது. கடவுள் தான் அனைவருக்கும் மேலானவர் என்பதால் இந்த விவகாரத்தில் விரைவில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்பதை தீட்சிதர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் தீட்சிதர்கள் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்ததால்தான் அரசு தலையிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது” என்றனர். அப்போது அறநிலையத்துறை தரப்பில், “தீட்சிதர்கள் சுய ஒழுங்கு இல்லாமல் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக நேரம் மற்றும் அதற்கான வழிமுறைகளுடன் திட்டம் வகுத்து வரும் நவ.14-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்