கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்-க்கு ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரரான தனபால், கோடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். விபத்தில் இறந்த கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கக் கோரியும் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “அதிமுக பொதுச் செயலாளராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வரும் தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் தனபால் தனக்கு எதிராக பொய்யான, அவதூறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்,” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியங்களை பதிவு செய்த வழக்கறிஞர் ஆணையர் எஸ். கார்த்திகை பாலன் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், முன்பு இன்று (நவ.7) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மனுதாரரான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால் ரூ.1.10 கோடியை மான நஷ்டஈடாக பழனிசாமிக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்தில் அவரை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்