விழுப்புரம்: பழையன கழிதலும்... புதியன புகுதலும் என்று அண்மையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களையும் ஊகங்களையும் கிளப்பியது. ராமதாஸ் கூட்டணி மாறப் போவதாகவும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். இந்த நிலையில், அந்தப் பதிவுக்கான விளக்கத்தை ராமதாஸ் இன்று அளித்தார்.
இது தொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது, “தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆந்திரா, பிஹார், ஒடிசா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் நாடகம் அம்பலமாகி, திமுக சொல்லும் சமூகநீதி என்ற முகமூடி கிழிந்துள்ளது. பொய்கள் மூலம் அரசு மக்களை ஏமாற்ற முடியாது.
தெலங்கானாவின் சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாதத்தின் இறுதியில் முடிகிறது. இப்பணிக்கு ரூ 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ரூ.250 கோடியில் 2 மாதத்தில் இதை நடத்தி முடிக்கலாம். தெலங்கானா காங்கிரஸ் அரசிடம் திமுக பாடம் கற்க வேண்டும். ஸ்டாலினின் முகமூடியை ராகுல் காந்தியும், ரேவந்த் ரெட்டியும் கழற்றியுள்ளனர். இது தேசிய அளவில் நடத்தப்பட உள்ள சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன் மாதிரியாக இருக்கும் என்று தெலங்கானா முதல்வர் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதல்வர் கைவிடவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் என்னவாகும் என்று தெரியவில்லை. ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை. கோட்டைக்கு போகாத நான் கோட்டைக்கு சென்று இக்கணக்கெடுப்பு நடத்த வலியிறுத்தினேன். இக்கணக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினை பாராட்டுவேன்.
» சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் - ஜம்மு காஷ்மீர் பேரவையில் கைகலப்பு
» செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் ‘பங்கேற்பு அணுகுமுறை’ - சென்னை ஐஐடி அழைப்பு
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும். 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்பவேண்டும். மருத்துவத்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவே பணியிடங்களை நிரப்பாததற்கு காரணம். ரூ. 40 ஆயிரம் கோடியை வரும் ஆண்டில் மருத்துவத் துறைக்காக ஒதுக்கவேண்டும்.
‘கூல் லிப்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் புகையிலை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு இது கடத்தி வரப்படுகிறது. இந்த புகையிலையை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, மத்திய அரசு இப்புகையிலையை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் 2,500 அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நூற்பாவிற்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நன்னூல் சூத்திரம் முழுமையாக யாருக்கும் புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன். இந்த நன்னூல் நூற்பாவின் விளக்கம் என்னவெனில், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தவறில்லை. உதாரணமாக, மரத்தில் கொழுந்தாக உள்ள இலை பின் பழுத்து விழுந்தால் அது தவறில்லை என்பதாகும்.
நாகரிகமாகவும், நளினமாகவும் எங்கள் செயல்பாடுகள் உள்ளன. காவல்துறையில் ஈரல் மட்டுமல்ல இதயம் உள்ளிட்டஉறுப்புகளும் செயலிழந்துவிட்டன. நாங்கள் ஏமாளிகள். பொறுத்துப் பொறுத்துப் பார்க்கிறோம். சிறைக்கு செல்வது எங்களுக்கு புதிது அல்ல. அமைதியை குலைக்க நாங்கள் விரும்பவில்லை. நூற்றுக்கு மேற்பட்ட அம்பேத்கர் சிலையை நான் திறந்துவைத்தேன். அச்சிலையை சேதப்படுத்தினால் பாமக, வன்னியர் சங்கம்தான் குரல் கொடுக்கும்.
கடலூர் காவல்துறைக்கு கற்பனை அதிகம். ஒரு சார்பு இல்லாமல் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்களை அடக்க முடியாது. நாங்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். கலைஞர் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கவேண்டும் என்பார். அதையே நானும் சொல்கிறேன். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் அப்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் முதலில் நான் தான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன்” என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய வன்னியர் சங்கத்தலைவர் பு.தா.அருள்மொழி, “காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கழுத்தை அறுப்பேன் என்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதை காவல்துறை கண்காணிப்பாளர் அனுமதிக்கலாமா? எனக்கு இருப்பது ஒரு கழுத்தா?” என்று கேள்வி எழுப்பினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago