சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பது நியாயமா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்த்தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே. அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் பாடியவர்களின் குறையில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள். உங்கள் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே, இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.
குறை இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டுமே தவிர. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையே தவிர்ப்பது நியாயமா? பாடியதில் குறை கண்ட நீங்கள் பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா? குறையோடு பாடுவது அநீதி... அதற்காக....பாடாமல் இருப்பது நீதியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago