சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், தடா - சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு நவ. 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு நவ. 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 6.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை - நெல்லூருக்கு மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 7.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், நெல்லூர் - சூலூர்பேட்டைக்கு அதே நாட்களில் காலை 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு அதே நாட்களில் நண்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
பகுதி ரத்துள்: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு நவ. 9, 12 ஆகிய தேதிகளில் காலை 4.15, 5.00 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், எளாவூர் - சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு நவ. 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 6.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை - எளாவூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
சூலூர்பேட்டை - சென்னை கடற்கரைக்கு நவ. 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 7.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை - எளாவூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago