திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவில் விலகாத மர்மம்: வல்லுநர்களின் உதவியை நாட அதிகாரிகள் திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவுக்கான காரணம் புலப்படாததால் பல்துறை வல்லுநர்களின் உதவியை நாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியில் இயங்கும் விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் கடந்த அக்.25-ம் தேதி திடீரென பரவிய வாயு நெடி காரணமாக 39 மாணவிகள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் முகமை மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில், பள்ளி வளாகத்தில் காற்றுத்தர பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும், வாயு கசிவுக்கான காரணம் கண்டறியப்படாததால் பள்ளிக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தனியார் பள்ளி நேற்று திறக்கப்பட்டது. அப்போது சில வகுப்பறைகளில் மீண்டும் மாணவர்களால் வாயு நெடி உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சுமார் 10 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இதற்கிடையே மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக காற்றின் தரத்தை பரிசோதிக்கும் மொபைல் வாகனம் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்தபடியே 500 மீட்டர் சுற்றளவுக்கு காற்றை உறிஞ்சி அதிலுள்ள நச்சுத்தன்மை குறித்து ஆராயும் பணிகள் நடைபெறுகின்றன.

அதேநேரம் இந்த ஆய்வில் சந்தேகத்துக்குரிய வாயுக்களோ, வேறு காரணிகளோ இதுவரை தென்படவில்லை. இதனால் அடுத்தகட்டமாக இத்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்களின் உதவியை நாட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்களின் கல்வி பாதிக்காதபடி ஆன்லைன் வகுப்புகளை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட இருப்பதாக துறைசார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பள்ளியில் கடந்த அக்.25, 26-ம் தேதிகளில் நடத்திய ஆய்வறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை செயலருக்கு சமர்ப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

பள்ளி வளாகத்தின் 3-வது தளத்தில் மொத்தம் 10 வகுப்பறைகள் உள்ளன. அதில் 10-ம் வகுப்பு அ, ஆ பிரிவு ஆகிய வகுப்பறைகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதே பள்ளியில் படிக்கும் வேறு எந்த மாணவரும் அசவுகரியத்தை உணரவில்லை. அருகில் வசிக்கும் பொதுமக்கள்கூட வாயுக் கசிவை உணரவில்லை. மேலும், வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவருக்குகூட உடல்நலப் பிரச்சினை கண்டறியப்படவில்லை.

அதேபோல், தேசிய பேரிடர் முகமை நடத்திய பரிசோதனையிலும் வாயுக் கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. பள்ளியின் அருகில் தொழிற்சாலை எதுவும் இல்லை. பள்ளியின் வேதியியல் ஆய்வகம் சம்பவம் நடைபெற்ற தளத்துக்கு எதிரே 2-ம் தளத்தில் அமைந்துள்ளது.

அந்த ஆய்வகத்தில் கடைசியாக நடந்த செய்முறைப் பயிற்சி வகுப்பில் பயன்படுத்தப்பட்ட ரசாயன பாட்டில்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அங்கு நடத்திய ஆய்வில் நச்சுதன்மை வாயுக்கள் அங்கிருந்து வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. மேலும், காற்றில் அமோனியா அளவும் அதிகமாக இல்லை. இதனால் அந்த சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்