அணைகள், ஏரிகளில் மதகு பராமரிப்பு கண்காணிப்பு: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அணைகள் மற்றும் ஏரிகளில் மதகுகள் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நீர்வளத் துறையின் அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது அப்போது, அமைச்சர் பேசும்போது, “தமிழ்நாடு முழுவதும் நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி அடுத்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். நீர் தேக்கங்கள், ஏரிகளின் மதகுகளைப் பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நீர்வளத் துறை செயலாளர் க.மணிவாசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்