குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதுடன் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தீயணைப்புத் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டி சாலையை சீர் செய்தாலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மீண்டும் மீண்டும் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் குன்னூர் பர்லியார் பகுதியில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டதுடன், சாலையின் ஒரு பகுதி சரிந்து கீழே விழுந்தது. சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் பொக்லின் எந்திரம் மூலமாக மண்களை அகற்றி சரிந்து விழுந்த சாலையை சீர் செய்தனர். மேலும் சாலை ஓரங்களில் காவல் துறையினர் கற்களை வைத்து விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago