ஆந்திராவில் கொலை; உடலை சூட்கேஸில் அடைத்து மீஞ்சூரில் கைவிட முயற்சி - தந்தை, மகள் கைது

By இரா.நாகராஜன்

பொன்னேரி: ஆந்திராவில் மூதாட்டியை கொலை செய்து, உடலை சூட்கேஸில் வைத்து ரயிலில் எடுத்து வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வைத்த தந்தை மற்றும் மகளை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்(43) மற்றும் அவரது 17 வயது மகளும், நேற்று (நவ.4) இரவு, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை -சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் பயணித்தனர். அப்போது, மின்சார ரயில், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்றபோது, தந்தையும், மகளும் பெரிய சூட்கேஸுடன் இறங்கினர்.தொடர்ந்து, அவர்கள் சூட்கேஸை ரயில் நிலைய நடைமேடையில் வைத்துவிட்டு, தனியாக நடந்து சென்றனர். இதுகுறித்து, பயணிகள் சிலர், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, தந்தை, மகளை பிடித்து வைத்த, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த ரயில்வே போலீஸார், சூட்கேஸை திறந்து பார்த்தபோது, நெல்லூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவரை தந்தையும் மகளும் கொலை செய்து, உடலை சூட்கேஸில் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகளையும் கைது செய்த போலீஸார், அவர்களை கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

மேலும்