சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்ரி விசாரணையை முடித்து, ரயில்வே வாரியத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த மாதம் 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுபோல, தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிநது, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்ரி, அங்குள்ள ரயில் தண்டவாளம், சிக்னல் பகுதி, ரயில் நிலையத்தின் எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பகுதி, கட்டுப்பாட்டு அறை உட்பட சிக்னல் மற்றும் இயக்க பிரிவுகளில் ஆய்வு செய்தார். இதையடுத்து, ரயில் ஓட்டுநர்கள், சிக்னல், நிலைய மேலாளர்கள் உட்பட 13 பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அக்.16,17 ஆகிய தேதிகளில், சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் அவர் விசாரணை நடத்தினார். அப்போது, ஒவ்வொருவரிடமும் அவர்கள் சார்ந்துள்ள பிரிவுகள் குறித்து, 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் விசாரணை நடத்தினார்.
சிக்னல், இன்டர்லாக்கிங் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து துருவித் துருவி விசாரணை மேற்கொண்டார். விபத்துக்கு முன்பு எந்த ரயில், எப்போது சென்றது, சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் அமைப்புகளின் தரம், இதற்கு முன்பு எப்போது பராமரிப்பு பணி மேற்கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறித்து முழு விவரங்களை கேட்டறிந்தார். இந்த விசாரணை முடிந்து, அடுத்த 10 முதல் 15 நாட்களில் ரயில்வே வாரியத்திடம் இந்த அறிக்கையை அளிப்பார் என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
» ‘அமரன்’ வசூல் எனக்கு ஏன் முக்கியம்? - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
» ‘மானை வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேளுங்கள் இல்லாவிட்டால்...’ - சல்மான் கானுக்கு புதிய மிரட்டல்
இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்ரி, ரயில்வே வாரித்தியடம் விசாரணை அறிக்கையை நேற்று (நவ.4) சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்த உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி விசாரணை அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்த உள்ளது. அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தொடர்பாக விவரம் தெரியவில்லை.” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago