நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கான தடைக்கல் என்ற கூற்று சரியானதல்ல: பேராசிரியர் பிரபா கல்விமணி

By என்.முருகவேல்

மருத்துவத்துக்கான அளவீடாக நீட் நிர்ணயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயில் நீட் தடைக்கல்லாக உள்ளது என்பதையும் ஏற்க இயலாது என்று பேராசிரியர் பிரபா கல்விமணி கூறியுள்ளார்.

கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயில நீட் தடையாக உள்ளது எனக் கூறி அனைத்து அரசியல் கட்சியினரும் குரலெழுப்பி வந்த நிலையில், கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவியும், நீட் தேர்வெழுதியும், அதில் தோல்வியடைந்த விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பிரச்சினை கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கியது.

இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் கிராமைத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 4-ம் தேதி மனமுடைந்து வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அதேபோன்று செஞ்சியை அடுத்த மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா என்ற மாணவி, நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், அவரும் நேற்று முன் தினம் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2-வது ஆண்டாக நீட் தேர்வினால்,மாணவிகள் தொடர்ந்து தற்கொலைக்கான நடவடிக்கையில் இறங்குவது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக கல்வியாளரும், பேராசிரியருமான பிரபா கல்விமணி (பேராசிரியர் கல்யாணி) கூறும்போது, ''12 ஆண்டு வகுப்பில் பயின்ற கல்வியை உதாசீனப்படுத்தும் வகையில் நீட் தேர்வு அமைந்துள்ளது. நீட் தேர்வே தேவையில்லை என்று நாம் குரல் கொடுக்கும் நேரத்தில், நமது கல்வி முறையிலும் மாற்றத்திற்கும், மாநிலக் கல்வி உரிமைக்கும் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசில் அங்கம் வகித்த கட்சிகள் மாநில கல்வி உரிமையைப் பறிகொடுத்துவிட்டு இன்று நீட்டுக்காகப் போராடுவது என்பது கேலிக்கூத்து.

அகில இந்திய அளவில் எழுத்தறிவு அதிகமுள்ளவர்கள் உள்ள மாநிலம் கேரளா, 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 56 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 40 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவை விட 16 சதவிகிதம் தான் நாம் குறைவு. எனவே குறைபாடு எங்கே உள்ளது என்பதை ஆராயவேண்டும்.

மேலும் நமது கல்வி முறையில் மாற்றம் அவசியமாகிறது. குறிப்பாக கடந்த 1978-ம் ஆண்டிலேயே அண்டை மாநிலமான ஆந்திராவில் 11 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகள் பொதுத் தேர்வுகளாக மாற்றியமைக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டுதான் பொதுத்தேர்வு என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு பின்னரே விழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் கடந்த 40 ஆண்டுகளாக தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு மதிப்பெண் மட்டுமே என்பதை விதைத்து அவர்களை மழுங்கடிக்கச் செய்துவிட்டனர். மேலும் எந்தப் பள்ளிகளிலும் தற்போது பன்முகத் திறன் கல்வி போதிக்கப்படுவதில்லை. மாணவர்களின் மன அழுத்தத்திற்கும் இதுவும் ஒரு காரணம். பன்முகத் திறன் கல்வியை போதிக்கும்போது, மாணவனுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும்.

மேலும் மருத்துவத்துக்கான அளவீடாக நீட் நிர்ணயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயில் நீட் தடைக்கல்லாக உள்ளது என்பதையும் ஏற்க இயலாது. இது சில தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களால் ஏற்படுத்தப்படும் பரப்புரை. காரணம் இதே மாணவி பிரதீபா 2016-ம் ஆண்டு மருத்துவம் பயில முயற்சித்த போது, தனியார் கல்லூரியில் ரூ.5 லட்சம் வரை கட்டணம் கோரியதால், அந்த மாணவியால் மருத்துவம் சேர இயலவில்லை. அரசுக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் 2017, 2018-ல் நீட் தேர்வை எதிர்கொண்ட போதும், அவருக்கு போதுமான மதிப்பெண் கிடைக்கவில்லை. மேலும் அரசுக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே தான் நீட் என்பது கிராமப்புற மாணவர்களுக்கான தடைக்கல் என்ற கூற்று தவறானது. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களது வருவாயை மீட்டெடுக்க திட்டமிட்டு பரப்புரை செய்கின்றனர்.

பள்ளிகளில் பன்முகத் திறன்கொண்ட கல்வி போதிக்கப்படுவதை கட்டாயமாக்கவேண்டும், மேல்நிலைத் தேர்வுகளை பொதுத்தேர்வு முறையில் நடத்துவதன் மூலமே மாணவர்கள் எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் ஏற்படும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்