மதுரை: கூடா நட்புறவு வெளியே தெரியாமல் இருக்க, மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவும், சிறுமிக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் இழப்பீட்டை திரும்பப் பெறவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் ராஜமோகன். இவர் மீது கடந்த 2019-ல் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் போக்சோ வழக்கில் ராஜமோகனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மதுரை போக்சோ நீதிமன்றம் விசாரித்து, ராஜமோகனுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. தண்டனையை ரத்து செய்யக் கோரி ராஜமோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இதனை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி மாற்றி மாற்றி வாக்குமூலம் அளித்துள்ளார். புகார், வாக்குமூலம், நீதிமன்ற விசாரணையில் சிறுமியின் சாட்சிகள் முரண்படுகிறது. சிறுமியின் தாயாரின் 2-வது கணவரை மனுதாரர் தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இதை மறைத்துள்ளனர். மருத்துவ ஆதாரம் இல்லை. இவற்றிலிருந்து மனுதாரர் மீது அளிக்கப்பட்ட புகார் உண்மையில்லை என்பது தெரிகிறது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.
சிறுமியின் தாயார் மற்றும் அவரது 2-வது கணவர் இடையிலான கூடா நட்புறவில் இருந்து தப்பிக்க மனுதாரர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை பொய் பேசாது என்ற இயல்புக்கு எதிராக சிறுமியும் உள்நோக்கம் தெரியாமல் மனுதாரர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். விசாரணை அதிகாரி நியாயமாக விசாரணை நடத்தாமல் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார். அதே ஊரைச் சேராதவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வெற்றுத்தாள்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். இதனால் மனுதாரர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டதற்காக சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் 22-வது பிரிவின் கீழ் மதுரை மாநகர் காவல் ஆணையர் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» “தெலுங்கு மக்களைப் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை” - நடிகை கஸ்தூரி விளக்கம்
» முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிகளை வகுக்கக் கோரி புதிய வழக்கு
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை குறித்து கேட்டபோது, ‘மனுதாரர், நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மனைவி புற்றுநோயாளி. என் மகளுக்கு மூளை வளர்ச்சி குறைவு. நான் தான் அவர்களை பார்க்க வேண்டும். இதனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர் இழப்பீடு பெற உரிமையற்றவர். எனவே அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திரும்பப் பெற வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago