மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர் கிராமங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று (நவ.3) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று இரவு 11 மணியளவில் கோடியக்கரைக்கு கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, வேலு என்கிற பழனிவேல்(45) என்பவர் விசைப்படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். அதன் பிறகு அவரைக் காணவில்லை என்று சொல்லப்படுகிறது.
அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள், படகுகளில் சென்று தேடியும் மீனவர் பழனிவேலை கண்டறிய முடியவில்லை.இதையடுத்து இன்று (நவ.4) அதிகாலை முதல் கடலோர காவல் படையினார் மற்றும் கடலோர காவல் நிலைய போலீஸார் பழனிவேலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago