மதுரையில் பெரும் போராட்டத்திற்கு பிறகு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய இருக்கும் மகிழ்ச்சியை பொதுமக்கள் கொண்டாடி வரும்நிலையில் அதிமுகவினரும், பாஜகவினரும் பட்டிமன்றம் நடத்தாத குறையாக அந்த மருத்துவமனையை கொண்டு வர முயற்சி செய்தது யார்? என ‘போஸ்டர் யுத்தம்’ நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே தோப்பூரில் ரூ.1500 கோடியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய இருக்கிறது. இந்த மருத்துவமனைக்காக தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் தொடங்கி தொழில் முனைவோர்கள், தன்னார்வலர்கள், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதில், தொழில் முனைவோர்கள், வர்த்த சங்கத்தினர், வழக்கறிஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். பரிந்துரை பட்டியலில் தகுதியான இடத்தில் மதுரை இருந்தும், ஒரு கட்டத்தில் மதுரைக்கான வாய்ப்பு கைவிட்டு நழுவும் அபாயம் ஏற்பட்டது.
அப்போது போராட்டத்திற்கு பின்னூட்டமாக 2 மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்பிக்கள் செயல்பட்டு போராட்டக்குழுவவினருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்ந்து சந்தித்து மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கொண்டு வர முறையிட்டனர். அதன் விளைவாக தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, மதுரை வசமாகியுள்ளது. விரைவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளநிலையில் அதற்காக ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.
இந்நிலையில் பாஜகவினர் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள அந்த விழாவில் பிரதமர் மோடியையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவையும், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணனையும் பங்கேற்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
அதேநேரத்தில், அதிமுகவை முன்னிலைப்படுத்த மதுரையை சேர்ந்த உள்ளூர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோரை பிரதானப்படுத்தி அடிக்கல் நாட்டு விழா நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வர முயற்சி செய்தது யார்? என பட்டிமன்றம் நடத்தாத குறையாக ஊரெல்லாம் போஸ்டர்கள் ஓட்டி வருகின்றனர்.
அதிமுகவினர், தென் மாவட்டமக்களின் கோரிக்கையான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை மதுரையில் அமைக்க முயற்சி செய்த முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நன்றி தெரிவித்தும், பாஜகவினர், மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘எய்ம்ஸ்’ மருத்துமனையை போராடி பெற்று தந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான இடம் தேர்வு விஷயத்தை தவிர்த்து மற்ற விஷயங்களில் தமிழக அரசும், மத்திய அரசும் இனக்கமாக செயல்படும்நிலையில் மதுரையில் இரு கட்சியினரும் எதிரும், புதிருமாகவே செயல்படுகின்றனர். தற்போது அது, ‘எய்ம்ஸ்’ அறிவிப்பு விவகாரத்திலும் வெளிப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago