விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாபம் விடுகிறார். விஜயும், திமுகவும் கொள்கை ரீதியாகவே தவறு செய்துள்ளதாக சீமான் கூறுகிறார். அப்படி கொள்கை ரீதியாக தவறு செய்பவர்கள் லாரி விபத்தில் சிக்குவார்கள் என்றால், எங்களை போன்ற பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்கள் நிலை என்ன? முதலில் அவர் கட்சியில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்ய வேண்டும். அவர் கட்சியில் ஏராளமான ஊழல் நடைபெறுகிறதாம். தாங்கள் செய்ய வேண்டியது குறித்து திமுகவுக்கும், தவெகவுக்கும் தெரியும். ஆனால் இவர்தான் தனது வேலையை சரிவர செய்யாமல், விளம்பரம் தேடிக்கொண்டு அலைந்து திரிகிறார். உத்தமர்போல் சாபம் விட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்