சென்னை: சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பாததால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக, புதிய தொழிலாளர்களை பணிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 116.1 கி.மீ. தொலைவுக்கு ரூ.63,246 கோடியில் நடைபெற்று வருகின்றன. அதாவது, மாதவரம் - சிறுசேரி வரை 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளில் பிஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்து வந்து, மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் பிற மாநில ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபடுத்தி உள்ளன. இருப்பினும் தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களில் 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. அவர்கள் தங்களின் சொந்த ஊர்களில் வேறு பணிகளுக்கு செல்கின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் பணியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், பலர் அருகே உள்ள மாநிலங்களில் நடக்கும் மெட்ரோ பணிகளில் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களுக்குப் பதிலாக புதிய தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த ஒப்பந்ததாரர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
» திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு தீர்மானம்
» வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் நவ.9 வரை மழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 30 முதல் 40 சதவீதம் வரை ஆட்கள் பற்றக்குறை உள்ளது. குறிப்பாக, மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 30 சதவீதம் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, கூடுதல் பணியாளர்கள் நியமிப்பதோடு, தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் வேலை மாற்றங்களை செய்து வருகிறோம்.
பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் 4-வது வழித்தடத்தில் ஆட்கள் பற்றாக்குறை இல்லை. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் 5 சதவீதம் ஆட்கள் பற்றக்குறை இருக்கிறது. இந்த வழித்தடத்தில், ஏற்கெனவே திட்டமிட்டப்படி, மெட்ரோ ரயில் பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். 3 வழித்தடங்களில் 2028-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago