மதுரை: தீபாவளி விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் மதுரையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து மதுரையில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (அக். 02) நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு விசாரணை மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் விசாரித்தார்.
மேலும், அனைத்து வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகளின் இயக்கங்கள் குறித்தும், முன்பதிவு செய்துள்ள பயணிகளிடையே பேருந்து வசதிகள் குறித்தும் அமைச்சர் பயணிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago