தீபாவளியின்போது விதிமீறி இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியது: தீபாவளி பண்டிகையின்போது, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் உயர்த்தி வசூலிக்க கூடாது என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகையின்போது, சென்னை, மதுரை, திருச்சி, சேலம்,கோவை உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலை பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் இந்த குழுவினர் சோதனை நடத்தினர்.

அப்போது, விதிமீறி இயக்கப்பட்ட 1,150-க்கும் மேற்பட்ட ஆம்னிபேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை முடிந்து மக்கள் ஊர் திரும்பும் வரை தொடர்ந்து சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்