சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் நேற்றைய நிலவரப்படி அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 72.85 சதவீதமாக உள்ளது. மேலும், 1,810 ஏரிகள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
10 நாளில் நீர் இருப்பு உயர்வு: தமிழகத்தில் சென்னை, திருச்சி,கோவை, மதுரை ஆகிய மண்டலங்களில் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 2,24,297 மில்லியன் கனஅடி. இவற்றில் நேற்று 1,63,411 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த 10 நாட்களில் இவற்றின் நீர் இருப்பு 14 சதவீதம் அதிகரித்து 72.85 சதவீதமாக உள்ளது.
குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி, தருமபுரி வறட்டாறு, கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, பாம்பாறு, கடலூர் மாவட்டம் வீராணம், தென்காசி குண்டாறு, தேனி மஞ்சளாறு, சோத்துப்பாறை, விருதுநகர் குல்லூர்சந்தை, கன்னியாகுமரி மாம்பழத்துறையாறு, கரூர், நொய்யல் ஆத்துப்பாளையம், திருப்பூர் அமராவதி, கோவை மாவட்டம் சோலையாறு, ஆழியாறு, திண்டுக்கல் வர்தமாநதி, குதிரையாறு, மருதாநதி, ஈரோடு குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம், பாலக்காடு பரம்பிக்குளம், துணக்கடவு - பெரிவாரிபள்ளம், திருவண்ணாமலை - சாத்தனூர், திருப்பத்தூர் -ஆண்டியப்பனூர் ஓடை ஆகிய நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
» சீனர்கள் மீதான தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: சீன அரசு வலியுறுத்தல்
» ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மூலம் நாசாவின் 47 ஆண்டு பழமையான வாயேஜர் 1 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு
மேலும், திருமூர்த்தி, செண்பகத்தோப்பு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு - 1, சித்தாறு - 2,பாலாறு - பொருத்தலாறு, பரப்பலாறு, கொடகனூறு அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
1,211 ஏரிகளில் நீர் இல்லை: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 14,139 ஏரிகள் உள்ளன. இவற்றில் நேற்றைய நிலவரப்படி, 1,810 ஏரிகள் நிரம்பிவிட்டன. 2,380 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 2,312 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 2,427 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 3,999 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. அதேநேரம், 1,211 ஏரிகளில் நீர் அறவே இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago