சென்னை: தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள் ளதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து டிடிவி.தினகரன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: பத்திரப் பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, ஏழை மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும். எனவே, முத்திரைத் தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகைபத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என 20 வகையான பதிவு களுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறைபன்மடங்கு உயர்த்தியுள்ளது. தத்தெடுத்தல், பிரமாணப் பத்திரம், உடன்படிக்கை, சங்கம் பதிவுக்கான கட்டணம் என பெரும்பாலான முத்திரைத் தாள் கட்டணத்தை கடந்த ஆண்டு பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு, தற்போது சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் கட்டணத் தையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் பத்திரப்பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்தியிருக்கும் திமுக அரசால், ஏழை, நடுத்தர மக்களின்சொந்த வீடு கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், இனி மக்களின் மீது சுமையை ஏற்றாமல் பத்திரப் பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
23 hours ago
தமிழகம்
1 day ago