சென்னை: தெற்கு ரயில்வேயில் 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன.
இதற்கிடையில், தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தங்களில் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டது. பல இடங்களில் வாகன நிறுத்தங்களுக்கான புதிய ஒப்பந்ததாரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தமுடியா மல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற் கான வசதியை ஏற்படுத்த பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர்.
இந்நிலையில், 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியைகொண்டு வருவதற்கான பணிகள்தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பெரும்பாலான ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியை கொண்டுவர, படிப்படியாக ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், கோட்டூர்புரம், செவ்வாய்ப்பேட்டை சாலை, கொருக்குப்பேட்டை சரக்கு கொட்டகை, மதுராந்தகம், பெரம்பூர், அரக்கோணம், பரங்கிமலை, திண்டிவனம், தடா, தரமணி, காட்பாடிஉட்பட 24 இடங்களில் வாகனநிறுத்த வசதிக்கான ஒப்பந்ததாரர் களை விரைவில் தேர்வு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். தற்போது, இதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
23 hours ago
தமிழகம்
1 day ago