‘தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம்’ - செல்வப்பெருந்தகை

By டி.செல்வகுமார் 


சென்னை: “தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை இன்று (நவ.1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று (நவ.1) மாலை முதல் நாளை மறுநாள் வரை வயநாட்டில் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்த வரும் நவ 5 -ம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் தொடங்கும்.

இந்த பணிகள் டிச.15-ம் தேதிக்குள் முடிவடையும். அதைத் தொடர்ந்து ‘கிராம தரிசனம்’ என்ற பெயரில் கிராமங்கள் நோக்கி செல்ல இருக்கிறோம். எங்கள் தலைவர்கள் கிராம மக்களுடன் தங்கி பணியாற்றுவர்.கட்சி வலிமையாகவும் , உயிரோட்டமாகவும் இருந்தால் தான் பிற கட்சிகள் எங்களைத் தேடி வரும்.

தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டது. அதிகாரப்பகிர்வு குறித்த தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம்.

தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் பெருந்தலைவர் ‌காமராஜர் கட்சி அமைய வேண்டும். அதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்