உதகை: இயற்கை மரண இறுதிச் சடங்குக்கான உதவித்தொகையை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குந்தா தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், இவர் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். உதகை நொண்டிமேடு பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், இவருடைய தந்தை ஆலுகுட்டி இயற்கை மரணம் அடைந்தார். இதனால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் இறுதி சடங்கு செலவு உதவித்தொகை வாங்குவதற்காக, குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில், நாராயணன் விண்ணப்பம் கொடுத்தார் .
இந்த மனுவுக்கு தீர்வு சொல்லாமல் பல நாட்களாக இழுத்தடிக்கப்பட்டது. இதுகுறித்து பலமுறை நாராயணன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. முடிவில் அப்போது அங்கு வட்டாட்சியராக பணியாற்றிய கனகம், தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி ஆகியோர், பணம் கொடுத்தால் தான் பணி விரைவில் முடிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பாத நாராயணன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி-யான சுதாகர், ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 1-11-2010-ம் ஆண்டு ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை வட்டாட்சியர் கனகத்துக்கும் ரூ.500 பணத்தை சாஸ்திரி ஆகியோருக்கும் நாராயணன் தந்துள்ளார். அவரிடமிருந்து இருவரும் பணத்தை வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
» அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி நன்றி!
» தீபாவளி பண்டிகை: இபிஎஸ், செல்வப்பெருந்தகை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
இதன்பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, வட்டாட்சியர் கனகம் மற்றும் தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன் பின்னர் அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் ரேணுகா கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago