சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, இன்று (அக்.30) மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதாவது, புதன்கிழமை காலை 5 மணிமுதல் இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை வரையிலான பச்சை வழித்தடம் மற்றும் விம்கோ நகர் - விமான நிலையம் மெட்ரோ வரை நீல வழித்தடம் ஆகியவற்றில் புதன்கிழமை காலை 8 மணிமுதல் முற்பகல் 11 மணி வரையும், மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அதே நேரத்தில், விமான நிலையம் - விம்கோ நகர் வரையிலான நீல வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அக்.31, நவ.1 (வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் மெட்ரோ ரயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும். காலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago