சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வதால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக இன்று கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காத பலர், விமானங்களில் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
அலைமோதும் பயணிகள்: இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. அதேபோல், திருவனந்தபுரம். கொச்சி, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
சென்னை- தூத்துக்குடி சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.4,109, இது நேற்று ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்தது. சென்னை- மதுரை இடையே சாதாரண நாட்கள் ரூ.4,300 ஆகும். இந்த கட்டணம் நேற்று ரூ.11,749 முதல் ரூ. 17,745 வரை இருந்தது. சென்னை - திருச்சிக்கு சாதாரண நாட்கள் ரூ.2,382 ஆகும்.
» இந்தி வாய்ப்பு வராதது ஏன்? - நித்யா மேனன்
» சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
நேற்று ரூ.8,211 முதல் ரூ.10,556 வரை இருந்தது. சென்னை - கோவை சாதாரண நாட்கள் ரூ.3,474 ஆக இருக்கும். இந்தக் கட்டணம் நேற்று ரூ.7,872 முதல் ரூ.13,428 வரை உயர்ந்தது. சென்னை - சேலம் சாதாரண நாட்களில் ரூ.3,300 இருக்கும் நிலையில், நேற்று ரூ.8,353 முதல் ரூ.10,867 வரை அதிகரித்தது.
இதேபோல் சென்னை - டெல்லி சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.5,475. நேற்று ரூ.5,802 முதல் ரூ.6,877 வரை இருந்தது. சென்னை- கொல்கத்தா சாதாரண நாட்கள் ரூ.4,599. நேற்று ரூ.11,296 முதல் ரூ.13,150 வரை. சென்னை - ஹைதராபாத் சாதாரண நாட்கள் ரூ.2,813. நேற்று ரூ.3,535 முதல் ரூ.7,974 வரை.
சென்னை - அந்தமான் சாதாரண நாட்கள் ரூ.5,479. நேற்று ரூ.9,897 முதல் ரூ.10,753 வரை. சென்னை - திருவனந்தபுரம் சாதாரண நாட்கள் ரூ.3,477. நேற்று ரூ.6,185 முதல் ரூ.18,501 வரை. சென்னை -கொச்சி சாதாரண நாட்கள் ரூ.2,592. நேற்று ரூ.4,625 முதல் ரூ.6,510 வரை. நாளை தீபாவளி பண்டிகை என்பதால், இன்று விமான கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago