“விஜய் ரசிகர்களில் பாதி பேர் எனக்கே வாக்களிப்பர்” - சீமான் நம்பிக்கை

By என்.கணேஷ்ராஜ்

தேனி: “விஜய் வருகையால் எனது வாக்குகள் குறையாது. அவரது ரசிகர்களில் பாதி பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று தேனி அருகே மதுராபுரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்காமல், வெறுமனே தீபாவளி வாழ்த்துகள் மட்டும் கூறுவது ஏற்புடையதல்ல. எங்களைப் பொறுத்தவரை பாஜக தேவையில்லாத கட்சி. நீட், ஜிஎஸ்டி. உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான். அதற்கு துணையாக இருந்தது திமுக. என் இனத்தின் எதிரி காங்கிரஸ்.

பொதுவாக ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை விஜய்யின் பெருந்தன்மை. அதனை ஏற்று அவரது கூட்டணியில் இணைவது அவரவரது விருப்பம். எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது; நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. ஏனென்றால், விஜய்யின் ரசிகர்களில் பாதி பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்'' என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்