சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு நாளை (அக்.30) அரைநாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (அக்.30) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி (வியாழன்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர். ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, நவம்பர் 1-ம் தேதி (வெள்ளி) ஒருநாள் விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago