சென்னை : சென்னை கொளத்தூர் தொகுதியில் நவ.4-ம் தேதி முதல் பகிர்ந்த பணியிடமான ‘முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். சென்னை, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப்படுகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகளை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் கணினி கற்பதற்காக, அனிதா பெயரில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட மையத்தில், 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்துள்ளனர். இதன், 13-வது பேட்ச்சாக வரும் நவ.4-ம் தேதி அதில் பயிற்சி முடித்தவர்களுக்கு கணினி வழங்க இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக, 105 பேருக்கு கணினியும், 360 பேருக்கு தையல் இயந்திரமும் வழங்குகிறார்.
மேலும், சென்னை மாநகராட்சியும், சிஎம்டிஏவும் இணைந்து, முதல்வரின் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கொண்டு புதிதாக “முதல்வர் படைப்பகம்” என்ற மையத்தை அமைத்துள்ளன. இந்த படைப்பகத்தில் வருகின்றவர்களுக்கு படிப்பதற்கென்று ஒரு தளமும், அதைபோல் பணியாற்றுவதற்கு என்று ஒரு தளமும், உணவு அருந்துவதற்கு ஒரு தளமும் என 3 தளங்கள் உள்ளன. ஒரு நேரத்தில் 51 பேர் படிக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது. அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட இருக்கிறது.
கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ்: அதேபோல், அவர்கள் பணி செய்வதற்காக கோ- ஒர்க்கிங் ஸ்டேஷன் எனப்படும் ஒரு தளத்தையும் அமைத்திருக்கிறோம். அதில் 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம். அதில் 3 கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்படுகின்றன.
» துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்: இந்து முன்னணி விமர்சனம்
» பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்க தீயணைப்பு வீரர்கள் தயார்
கலந்தாய்வு கூடங்களில் இரண்டில் தலா 4 பேரும், ஒன்றில் 6 பேரும் அமர்ந்து பணியாற்ற முடியும். இந்த முதல் கோ- ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் 'முதல்வர் படைப்பகம்' கட்டிடத்தை வரும் நவ.4-ம் தேதி முதல்வர் திறக்கிறார்.
இந்த இடம் பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். கோ ஒர்கிங் ஸ்பேஸ்-ல் கூட பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதில்லை. பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கின்ற அந்த நிறுவனங்களுக்கு இந்த பணியிடத்தினை பகிர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதற்கும் குறைந்த அளவு கட்டணத்தை நிர்ணயிக்க உள்ளோம். இது ஓர் புது மாதிரியான முயற்சி. இந்த முயற்சி அனைத்து பகுதிகளிலும் தொடர வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். இது கொளத்தூரை முன்மாதிரியாக ஆக்கும் முயற்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது,சென்னை மேயர் பிரியா, வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago