ராமேசுவரம்: இந்தியாவின் ரூ.143 கோடி நிதி உதவியின் மூலம் இலங்கையில் உள்ள 5,000 வழிபாட்டு தலங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 400 கோடி டாலர் மதிப்பிலான உதவியை இந்தியா வழங்கியது. இந்த நிதியில் அந்நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்திய அரசின் 17 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 143 கோடி) நிதியுதவியில் இலங்கை மின் வாரியம், இலங்கை புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை இணைந்து இலங்கையில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
முதற்கட்டமாக கொழும்பில் உள்ள ஹோகந்தர பவுத்த விகாரை, ஆஞ்சநேயர் கோயில், புனித அந்தோணியார் தேவாலயம், முட்வல் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு 5 கிலோ வாட் சோலார் பேனல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை மின் வாரியம் மற்றும் இலங்கை புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
» நீதித்துறை சிறப்பாக செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அழைப்பு
» பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு
இந்தத் திட்டத்தின் மூலம் 5,000 வழிபாட்டுத் தலங்கள் பயன்பெறும். 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் சோலார் பேனல்களை பொருத்துவதற்கு இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களுக்கும் தலா 5 கிலோவாட் கொண்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு 5 ஆயிரம் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 25 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழிபாட்டு தலங்களின் பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை இலங்கை மின் வாரியம் எடுத்துக்கொள்ளும். அதாவது ஆண்டுக்கு சுமார் 3.7 கோடி யூனிட் மின்சாரம் இலங்கை மின் வாரியத்துக்குக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மாசு இல்லாத சுத்தமான எரிசக்தி இலங்கையின் மாற்றத்தை வலுப்படுத்தும். மேலும், வழிபாட்டுத் தலங்களின் மின்சார செலவினங்களை குறைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago