புதுச்சேரி: தீபாவளிக்கு முந்தைய நாளான 30-ம் தேதியும் புதுச்சேரி, காரைக்காலில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீபாவளிக்காக மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வருகிறது.
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் அரசு விடுமுறையாக உள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளான 30-ம் தேதியும் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடு செய்ய வரும் நவம்பர் 16-ம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும். இதற்கான உத்தரவை ஆளுநர் அனுமதியுடன் புதுச்சேரி அரசின் சார்பு செயலர் ஹிரண் வெளியிட்டுள்ளார்.
வரும் 30, 31-ம் தேதிகள் விடுமுறையைத் தொடர்ந்து வரும் நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி விடுதலைநாள் விடுமுறை வருகிறது. நவம்பர் 2-ம் தேதி கல்லறை திருநாள் விடுமுறை. நவம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை உள்ளது. இதனால் இம்முறை தீபாவளியையொட்டி 30-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago