சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடித்தது

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் ஆர்வமாக கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் திரளாக தீவுத்திடலுக்கு வந்தனர்.

அதனால் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பெரியதும் சிறியதுமான பட்டாசு நிறுவனங்கள் தீவுத்திடலில் ஸ்டால்கள் அமைத்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பட்டாசுகள் வாங்கும் நிலை உள்ளது.

சில்லறை விலையில் மட்டுமல்லாமல் மொத்தமாகவும் பட்டாசுகளை வாங்க முடிகிறது. பட்டாசு கிப்ட் பாக்ஸ் அதிகமாகவே இ்ந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ளது.

கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, சாட்டை, தரைச்சக்கரம், பயர் பென்சில்ஸ், மேக்னடிக் டார்ச்சஸ், பாம் ராக்கெட் என 30 வகையான பட்டாசுகள் கொண்ட கிப்ட் பாக்ஸ் ரூ.850-க்கும், 40 வகையான பட்டாசுகள் ரூ.950-க்கும், 50 வகையான பட்டாசுகள் ரூ.1,300-க்கும், 75 பட்டாசு வகைகள் கொண்ட கிப்ட் பாக்ஸ் ரூ.3,200-க்கும் விற்கப்படுகிறது. குழந்தைகள் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் நிறைந்த 55 வகைகள் கொண்ட கிப்ட் பாக்ஸ் ரூ.1,300-க்கு விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்