விஜய் கட்சியால் திமுகவுக்குத்தான் பாதிப்பு: ஹெச்.ராஜா கருத்து

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மூலப்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, மாவட்டத் தலைவர் வேதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது: போதைப் பழக்கத்துக்கு அடிமை யாக வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால், மாநில அரசு தொடர்ந்து மதுக் கடைகளை நடத்தி வருகிறது. அனைத்து மதுக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

நடிகர் விஜய், பிரிவினைவாதம் பேசக்கூடிய திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது கட்சியால் பாஜகவுக்கு பாதிப்பு கிடையாது. திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளைத் தான் அவர் பிரிப்பார். அதனால், திமுகவுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்