7,979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் வரை ஊதியம்: பள்ளிக்கல்வித் துறை அனுமதி

By சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979 பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31-ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கு 1 : 40 என்ற ஆசிரியர்: மாணவர் விகிதப்படி 7,979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு 2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இரு முறை ஊதிய கொடுப்பாணை (செப்.30 வரை) வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நிகழாண்டு அக்.1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31}ஆம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்து 7,979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.10.204 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதிய பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்