விஜய்யின் தவெக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: தாம்பரம் அருகே 11 பேர் காயம்

By பெ.ஜேம்ஸ் குமார்

சேலையூர்: தாம்பரம் அருகே நன்மங்கலத்தில் இருந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் சுய நினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் வெற்றி கொள்கை திருவிழா என்ற பெயரில் இன்று மாலை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழக முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் செல்கின்றனர். இந்நிலையில் தாம்பரம் அருகே நன்மங்கலம் பகுதியில் இருந்து டெம்போ ட்ராவல் 11 பேர் மாநாட்டுக்கு நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டனர்.

வாகனத்தை நன்மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் இயக்கியுள்ளார். தாம்பரம் - வேளச்சேரி சாலை சந்தோசபுரத்தில் வந்த போது முன்னே சென்ற லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் வேனில் பயணம் செய்த 11 பேர் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

ஓட்டுநர் கார்த்திக்கு பெரிதாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்ற போதிலும் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்துள்ளார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்