அவிநாசி: அவிநாசி அருகே நேற்று நள்ளிரவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் அபர்ணா (26). சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஐஐஎம்மில் 2-ம் ஆண்டு எம்.பிஏ. படித்து வருகிறார். அவரது மற்றொரு மகள் ஹேமா (21). கோவை தனியார் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். கோவை ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்டை சேர்ந்த அபர்ணாவின் நண்பர் மோனிஷ் பாபு (28). இவரது காரில் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே சிமெண்ட் கிடங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, 3 பேரும் பயணித்த கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் அவிநாசி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
லாரி ஓட்டுநரான கோவை கரும்புக்கடையை ரகுமான்கான் (24) என்பவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கல்லூரியில் பயிலும் சகோதரிகள் 2 பேர் உட்பட 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூவரின் சடலங்களும் அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago