சென்னை: நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் ஓ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா வெளியிட்டுள்ள அரசாணை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் கடந்த ஜுன் மாதம் அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், தற்போது நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என அழைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையத்தை ஓ.டி.ஏ. மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்வதற்காக இதை முன்வைக்க வேண்டும் என குறிப்பிடப்பிட்டிருந்தார்.
இந்த பெயர் மாற்றம் தொடர்பான வேண்டுகோளை கடந்த மே மாதம் தென்பிராந்திய ராணுவ தளபதியும் கொடுத்திருந்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜுலை மாதம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை ஓ.டி.ஏ. மெட்ரோ ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யலாம் என அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதை ஏற்று நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தை ஓ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கி ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago