டானா புயல் காரணமாக நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

By கரு.முத்து

நாகப்பட்டினம்: டானா புயல் சின்னம் காரணமாக நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.

வங்கக் கடலில் கடந்த 21-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தீவிர புயலாக உருவெடுத்து வடக்கு ஒடிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் இன்றும், நாளையும் காற்று பலமாக வீசும் என்பதால் இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் சேவை போக்குவரத்து பாதுகாப்பு காரணங்களால் இன்று மட்டும் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்