நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை கவுதமி அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த நடிகை கவுதமி கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நடிகை கவுதமி அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தடா து.பெரியசாமி எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும், சென்னையை சேர்ந்த ஃபாத்திமா அலி, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய பிரிவு செயலாளராக இருந்த பி.சன்னாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர், கட்சியின் மாநில விவசாயப் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்