சாலை விபத்துகளைத் தவிர்க்க மதுபாட்டில்களில் எச்சரிக்கை வாசகம் அச்சிடுவது கட்டாயம்: 2019 ஏப்ரல் 1 முதல் அமலாகிறது

By க.சக்திவேல்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தவிர்க்க மதுபாட்டில்களின் மீது எச்சரிக்கை வாசகங்களை அச்சிட வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2019 ஏப்ரல் 1 முதல் அமலாக உள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 70,398 சாலை விபத்து கள் ஏற்பட்டுள்ளன. இதில், 26,317 பேர் உயிரிழந்துள்ளனர். 69,974 பேர் காயமடைந்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு நாளும் 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூக ஆர்வல ரான பிரின்ஸ் சிங்கால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “சாலை விபத்துகளைக் குறைக்க மதுபான பாட்டில்களின் லேபிள்களில், ‘குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது’ என்பதை விளக்கும் எச்சரிக்கை படம் மற்றும் வாசகத்தை அச்சிட உத்தரவிட வேண்டும்” என்று கோரியி ருந்தார்.

மேலும், “இதுபோன்ற எச்சரிக்கை முறையை அறிமுகப் படுத்திய பிறகு அமெரிக்கா, கென்யா, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் குறைந்துள்ளன” எனவும் பிரின்ஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பிரின்ஸின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டது. இதையடுத்து, அனைத்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர்களுக்கும் எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகள் (மதுபான தரம்) 2018, வரும் 2019 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. அந்த விதிமுறைகளின்படி மதுபாட்டில்களின் லேபிளில் ‘மது அருந்து வது உடல் நலத்துக்கு கேடானது. பாதுகாப்பாக இருங்கள்-குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்’ என்ற எச்சரிக்கை வாசகத்தை அச்சிட வேண்டும். இந்த வாசகத்தை ஆங்கிலத்தில் அச்சிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தந்த மாநில மொழிகளில் அச்சிட்டுக் கொள்ளலாம்.

இந்த உத்தரவை வரும் 2019 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநில ஆயத்தீர்வை துறையுடன் இணைந்து அந்தந்த மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர்கள் அமல்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

டாஸ்மாக்குக்கு அறிவுறுத்தல்

இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

“சாலை விபத்துகளில் குறிப்பிடத்தக்க அளவு விபத்துகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாலேயே ஏற்படுகின்றன. எனவே, அனைத்து வகையான மதுபான பாட்டில்களின் லேபிள்களிலும் எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்கவும், டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை வாசகங்கள் தெரியும்படி விளம்பரப்படுத்தவும் டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய புதிய லேபிள்களை அச்சிட வேண்டும் என்பதற்காக ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் முதல் உத்தரவு முழுமையாக அமல் படுத்தப்படுகிறதா என்பதை உணவுப் பாதுகாப்புத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக் கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்