தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே இல்லாமல் 15 கிலோ மீட்டர் அப்பால் இருந்த 2 துணை வட்டாட்சியர்கள் சம்பவ இடத்தில் தாம் இருந்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து சிக்கியுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 99 நாட்களாக போராடி வந்த மக்கள் 100-வது நாளில் பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் போவதாக அறிவித்தனர். இதையொட்டி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி பேரணி நடந்தது. ஆட்சியர் அலுவலகம் அருகே கலவரம் மூண்டதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 10 பேர் வரை உயிரிழந்தனர்.
பக்கத்தில் மீனவ கிராமமான திரேஸ்புரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு சிலர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டின் போது ஆணையிட வேண்டிய ஆட்சியர் அங்கு இல்லை, ஐஜி இல்லை, டிஐஜி இல்லை, மாவட்ட மாஜிஸ்திரேட் இல்லை. ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கமாண்டோ வீரர்கள் எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகளை வைத்து ஒளிந்திருந்து சுட்டதாகப் புகார் எழுந்தது.
முதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எழுந்தபோது நானில்லை நீயில்லை என்று கூறி கடைசியில் துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் ஆகிய இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்ததாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியானது.
இதில் தற்போது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திரேஸ்புரம் இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்தான் 12 பேர் வரை உயிரிழந்தனர். மற்ற பகுதிகளிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். ஆட்சியர் அலுவலகம், திரேஸ்புரம் ஆகிய 2 பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டது என்ற கேள்வி எழுந்தது.
தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.கண்ணன் தான் திரேஸ்புரத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார். இதேபோல் தூத்துக்குடி துணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர் தான் ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார். ஆனால் இவர்கள் இருவருமே இங்கு பணியில் இல்லை என்ற அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஒரு நாள் முன்னர் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முதல் நாள் 144 தடை உத்தரவு போடப்பட்டதை அடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி சார் ஆட்சியர் 9 துணை வட்டாட்சியர்களுக்கு போராட்டம் நடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைப் பிரித்து அவரவருக்கு தனித்தனி பகுதிகளை ஒதுக்கியுள்ளார். இந்தப் பகுதி தற்போது வெளியாகி உள்ளது. ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு தனி வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலனுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குதான் துப்பாக்கிச் சூட்டில் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
ஆனால் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இவர் உத்தரவிடவில்லை, மாறாக ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் பாத்திமா நகர், லயன்ஸ்புரம் உள்ளிட்ட 4 பகுதிகளுக்கு பொறுப்பான சேகர் உத்தரவிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் துப்பாக்கிச் சூடு நடந்து உயிரிழப்பு நிகழ்ந்த திரேஸ்புரம் பகுதிக்கு துணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர் பொறுப்பு. ஆனால் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், தூத்துக்குடி மதுரை நான்கு வழிச்சாலை சந்திப்பில் பணி ஒதுக்கப்பட்டிருந்த மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது தானே என்று முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளார்.
இவருக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்ட பகுதியும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 10 கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள பகுதி என்று தெரிவிக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட இடத்தில் பொறுப்பு ஒதுக்கப்பட்ட துணை வ்துப்பாக்கிச் வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிடாமல் வேறு பகுதியில் பொறுப்பில் உள்ள துணை வட்டாட்சியர்கள் எப்படி உத்தரவிட முடியும் என்பதே தற்போது வெளியாகியுள்ள கேள்வி.
துப்பாக்கிச் சூடு முறையாக எச்சரிக்கை விடுத்து அதற்கென்று உள்ள ரைபிள் டீம் வைத்து நடத்தாமல் கமாண்டோ வீரர்களை வைத்து ஏன் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கே விடை கிடைக்காத நிலையில் சம்பவ இடத்தில் பொறுப்பில் உள்ள துணை வட்டாட்சியர்கள் உத்தரவிடாமல், 5கிலோ மீட்டருக்கு அப்பால் வேறு இடத்தில் இருந்த இரண்டு துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது சந்தேகத்தை கிளப்புகிறது.
இது குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் சம்பந்தப்பட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இருவரையும் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்கள் தொடர்பில் வரவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago