5 மாத பெண் குழந்தையை கடத்தி கழுத்தை அறுத்து வீசிய கொடூரம்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத பெண் குழந்தையை கடத்தி கழுத்து அறுத்து வீசிச்சென்ற கொடுர சம்பவம்  நடந்துள்ளது.

திருவள்ளூரை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேரந்தவர் ராபின். ஆட்டோ டிரைவரான இவரது மனைவி லிடியா. இவர்களுக்கு இனியா என்ற 3 வயதில் ஒரு மகளும், குஷி என்ற 5 மாத பச்சிளங் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராபின் வீட்டிற்கு வராத நிலையில், ராபினின் தாய் தந்தை மற்றும் தம்பி, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என வீட்டில் குடும்பத்துடன் அனைவரும் தூங்கியுள்ளனர்.

நள்ளிரவு 2.30 மணியளவில் 5 மாத பச்சிளம் குழந்தைக்கு தாய் லிடியா பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார். அதன் பிறகு 4.30 மணியளவில் எழுந்து பார்த்த போது அருகில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த லிடியா, வீட்டில் உள்ளவர்களை எழுப்பி வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கழுத்து மற்றும் காது அறுக்கப்பட்ட நிலையில் உயிருடன் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு 8 தையல் போடப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வீட்டின் உள்ளே புகுந்து குழந்தையை கடத்தியது யார்? எதற்காக கழுத்தை அறுத்து வீசி சென்றனர் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையின் தந்தை ராபின் நேற்றிரவு வீட்டிற்கு வராததால் இந்த சம்பவம் குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்