புதுச்சேரி: புதுச்சேரியில் காலை முதல் பொழியும் கனமழை காரணமாக இன்று (சனிக்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை கல்வி அமைச்சர் நமச்சிவாய அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் நீடித்து வந்தது. இது இவ்வாரத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்து மழை பொழிய தொடங்கியது. அதிக மழைப்பொழிவு காரணமாக இரண்டு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இன்று காலை முதல் புதுச்சேரியில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது தொடர்ந்து இடியுடன் கூடிய மழை அதிகளவில் பொழிந்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து கல்வி அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் அனைத்து கல்லூரிகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago