சென்னை: சென்னை புதுப்பேட்டை காவலர்குடியிருப்பில் 14-வதுமாடியிலிருந்து தவறி விழுந்துஆயுதப்படை காவலர் உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (29). இவர், சென்னைபுதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வந்தார்.
செல்வமுருகன் பராமரிப்புப் பணிக்காக புதுப்பேட்டை காவலர்குடியிருப்பில் உள்ள தண்ணீர்தொட்டியில் தண்ணீர் நிறைந்துள்ளதா? என பார்ப்பதற்காக நேற்று மதியம் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று பார்த்தபோது அவர் கால் தவறி 14-வதுமாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் செல்வமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எழும்பூர்போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மேலும், சம்பவ இடம்விரைந்து விசாரணை மேற்கொண்டனர். புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில், சக காவலர் ஒருவர் மாடியிலிருந்து தவறிவிழுந்த சம்பவம் அக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago