கலைஞர் பூங்காவில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் நுழைவுச்சீட்டு வழங்கும் நேரத்தில் மாற்றம்

By கி.கணேஷ்

சென்னை: சென்னையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பறவையகம், ஜிப்லைன் மற்றும் இசை நீரூற்று ஆகியவற்றுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு மழையின் காரணமாக கடந்த அக்.15 முதல் 18ம் தேதி நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டடிருந்தது. இந்நிலையில், 19-ம் தேதி முதல் வழக்கம் போல் பூங்கா செயல்படும்.கூட்ட நெரிசலைத் தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கான நுழைவுச்சீட்டு ‘https://tnhorticulture.in/kcpetickets’ என்ற இணையதளம் வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக, பறவையகம் மற்றும் ஜிப்லைனுக்கு மாலை 4 மணிவரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும். மேலும், இசை நீரூற்றுக்கு ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதால், மாலை 4 மணி முதல் இணையதளம் வாயிலாக நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மாலை 6 மணி வரை பொது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்