சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், ‘‘யாருக்கும்டெண்டர் வழங்கப்படவில்லை என கடந்த அக்.15-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அக்.14-ம்தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டதாகவும், அக்.10-ம்தேதியே அதற்கானதொகை பெறப்பட்டு விட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது’’ என வாதிட்டார்.
தவறான தகவல் ஏன்? - அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே டெண்டர் வழங்கப்பட்டு, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘அப்படியென்றால் டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லைஎன ஏன் நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடைகளை அமைக்க முடியாதா’’ என்று கேள்வி எழுப்பினார்.
» இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா பிரதமர் ஒப்புதல்
» சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் அக்.28-ல் சென்னை விஜயம்: நவ.13 வரை ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்பு
அரசை குறை கூறக்கூடாது: அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘காரணமின்றி அரசை குறை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது’’ என தெரிவித்தார். அப்போதுநீதிபதி, பட்டாசு விற்பனை மூலமாக தனிநபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்லஎண்ணத்தில்தான் தானும் பேசுவதாக தெரிவித்தார். மேலும், அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago