சென்னை: மாநகர பேருந்துகளில் பயன்படுத்தும் வகையிலான பயண அட்டைகளை அக்.24-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (அக்.17) வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகர பேருந்துகளில் அக்.16 முதல் நவ.15-ம் தேதி வரையில் செல்லதக்க, விருப்பம்போல் பயணம் செய்யக் கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை (TAYPT) மாதந்தோறும் 7 முதல் 22-ம் தேதி வரையிலும், மாதாந்திர சலுகை பயண அட்டை (MST) மாதந்தோறும் 1 முதல் 22-ம் தேதி வரையிலும், அக்.11 முதல் நவ.10-ம் தேதி வரை செல்லதக்க 50 சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டை (SCT) மாதந்தோறும் 1 முதல் 13-ம் தேதி வரை அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
எனினும், அக்.11 முதல் 15-ம் தேதி வரை பயணச்சீட்டுகள் விற்பனை செய்யக் கூடிய நாட்களில் ஆயுதபூஜை மற்றும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த காரணத்தால் மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பயண அட்டைகளும் அக்.24-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago