விழுப்புரம்: “தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்,” என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று (அக்.17) மாவட்டச் செயலாளரான சி.வி.சண்முகம் எம்.பி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக சீரும் சிறப்புமாக உள்ளதால் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago