சென்னை மாநகராட்சியில் செயல்படும் 388 அம்மா உணவகங்களில் இன்றும் இலவச உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 388 அம்மா உணவகங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, நேற்று வழங்கப்பட்டதுபோல், இன்றும் இலவசமாக உணவு வழங்கப்பட உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் (அக்.16) நாளையும் (அக்.17) இலவசமாக உணவு வழங்கப்படும்’’ என தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களில் நேற்று (அக்16) இலவச உணவுவழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்றும் (அக்.17) பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராகஉள்ளது. நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 412 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் நீர் அகற்றும் பணிகள்நடைபெற்று வருகின்றன. மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223மோட்டார் பம்புகள் பயன்படுத் தப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுகாலைவரையிலான 24 மணிநேரத் தில் 6,120 அழைப்புகள் வந்துள்ளன. இதன்மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 8 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மணலி, எழும்பூர், செனாய் நகர் மற்றும் பள்ளிக்கரணையிலும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் செனாய் நகர்-2, வில்லிவாக்கம் மற்றும் ராஜரத்தினம் அரங்கத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 80 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 100 வீரர்கள், மீட்புப் படகு, இயந்திர ரம்பம்,ஸ்டெக்சர் உள்ளிட்ட மீட்பு கருவிகளுடனும், சென்னையில் 103 படகுகளுடனும் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

மழைக்காலத்தினை முன்னிட்டு, சுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் நாள்தோறும் 100 இடங்களில் மழைக்கால சிறப்புமருத்துவ முகாம்கள் நடத்தப்படு கின்றன. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர்வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், மற்ற மாநகராட்சி, நகராட்சிகள், மற்ற மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 89 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.

மேலும், சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்