சென்னை: தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கோபிநாத் விடுத்த அறிக்கை: வடகிழக்குப் பருவமழையையொட்டி, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2016-ல் கூறப்பட்டுள்ளவாறு, மாற்றுத் திறன் அரசுப் பணியாளர்களுக்கு உள்ள நடைமுறைப் பிரச்சினைகள், சிரமங்கள் மற்றும்அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பேரிடர் காலங்களில், தமிழக அரசு, அரசு உதவிபெறும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறன் அரசுப் பணியாளர்களுக்கு, பணிக்கு வருவதில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும். மேலும், அந்த நாட்களை அவர்கள் பணிக்கு வந்த நாட்களாகக் கருதி, தமிழக அரசு உரியஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago