சென்னை: சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் காரணமாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மழைநீர் பெருக்கம் காரணமாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்து நிலை: தானா தெரு, வெலிங்டன் முதல் டேம்ஸ் ரோடு, சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் சந்திப்பு, டேங்க் பங்க் ரோடு, ஸ்டெர்லிங் சாலை, பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி, நீலாங்கரை சந்திப்பு முதல் நீலாங்கரை PS, அண்ணா சாலை முதல் எம்ஜிஆர் சாலை வரை, பிராட்வே சந்திப்பு, பிரகாசம் சாலை, ஹைத் மஹால், மண்ணடி மெட்ரோ, ப்ளூ ஸ்டார் சந்திப்பு, சிந்தாமணி, ஐயப்பன்தாங்கல், நெற்குன்றம் ரயில் நகர் நோக்கி, ஹெச்பி பெட்ரோல் பங்க், 200 மீ சாலைக்கு அருகில், மேட்டுக்குளம் முதல் தீயணைப்பு நிலையம் வரை, பட்டுலாஸ் சாலை, ஹப்லிஸ் ஹோட்டல், பால் வெல்ஸ் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து மெதுவாக செல்கின்றன.
மரங்கள் அகற்றம்: சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், இதுவரை போக்குவரத்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதுவரை மழையால் முறிந்து விழுந்த மரங்கள் அனைத்து வெட்டி அகற்றப்பட்டன.
மாற்றுப் பாதை: ஐஸ் ஹவுஸிலிருந்து ஜிஆர்ஹெச் சந்திப்புக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேணி ஹை ரோட்டை நோக்கி வலதுபுறம் திரும்பி, ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். மேலும், மோட்டார் வாகனங்கள் எப்போதும்போல தங்கள் வழியில் செல்லலாம். ஜிஆர்ஹெச் சந்திப்பில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு மாற்றம் இல்லை, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago